பாராளுமன்றத்தில் நாளை மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்கப்போவதாக ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பின் பின்னர் ஐக்கியதேசிய கட்சி இதனை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பு முடிவுகள் எட்டப்படாமல் முடிவடைந்தமை குறித்து ஏமாற்றமடைந்துள்ளோம் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

சபாநாயகரின் தீர்ப்பு தவறானது என்றால் மகிந்த ராஜபக்ச தரப்பினர் தீர்மானமொன்றை கொண்டுவந்து அதனை நிறைவேற்றலாம் என மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்தோம் என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இதற்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களிடம் பெரும்பான்மையுள்ளது நாங்கள் சத்தியக்கடிதாசியொன்றை சமர்ப்பிக்க தயாராகவுள்ளோம் என அஜித்பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய சந்திப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.

போலி பிரதமருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாததால் அவர்கள் நடைமுறைகள் குறித்து பொய்யான சாக்குப்போக்குகளை தெரிவித்து இந்த முட்டுக்கட்டை நிலையை தொடர்ந்து  நீடிக்கவைப்பதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை காப்பாற்றுவதற்காக இலங்கையை பலவீனப்படுத்துகின்றனர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.