நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை  வாய்மொழி மூலம் நடத்துவது பொருத்தமானதல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பிலேயே சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வாய்மொழி மூலம் வாக்கெடுப்பை நடத்துவது பொருத்தமானதல்ல என தெரிவித்துள்ள ஜனாதிபதி பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்தவேண்டும் அல்லது இலத்திரனியல் முறையில் நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மோதல் இன்றி பாராளுமன்ற  அமர்வுகளை முன்னெடுப்பதற்கு சர்வகட்சி கூட்டாரத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடக பிரிவு நாளைய அனைத்து கட்சி கூட்டத்தில் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பாக தீர்மானமொன்றை எடுப்பதாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது