நரேன் வழங்கும் என் பிக்சர்ன்ஸ் செல்பி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதா நரேன் தயாரிக்கும் படத்திற்கு “ நீ என்ன மாயம்செய்தாய் “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் விவேக் சேகர் கதாநாயகனாக நடிக்கிறார். நேஹா சக்சேனா நாயகியாக நடிக்கிறார். இவர் அர்ஜுனுடன் ஒரு மெல்லிய கோடு படத்தில் நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக அர்ஷிதா சாய் நடிக்கிறார். மற்றும் மதுரை ஷர்மிளா, மோனிகா, ஷீபா, மாஸ்டர் தமிழ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் எஸ்.ஆர்.பாலாஜியிடம் கேட்டோம்...

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வரும் சித்தார்த் ( விவேக் சேகர் ) தனது சிறு வயது தோழியை காண ஆவலோடு அவளைத் தேடி செல்கிறான். அங்கே அவனது சிறுவயது தோழி மேகா ( நேஹா சக்சேனா ) எல்லாவற்றையும் இழந்து நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அவளுக்கு ஆறுதல் சொல்லி, வேண்டிய உதவிகளை செய்கிறான். அந்த நட்பு காதலாக மாறுகிறது. அவர்கள் காதல் நிறைவேறியது இல்லையா என்பதை இளமை ததும்ப உருவாக்கி உள்ளோம். இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களின் ரசனைக்கேற்ப படம் உருவாகி உள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் எஸ்.ஆர்.பாலாஜி.

தகவல் : சென்னை அலுவலகம்