கலா­ப­வன்­ ம­ணியின் உடலில் பூச்­சிக்­கொல்லி மருந்து கலந்­துள்­ள­தாக பிரேத பரி­சோ­த­னையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் குறித்த பூச்­சிக்­கொல்லி மருந்தை கலா­ப­வன் ­ம­ணியின் மாமனார் கடையில் வாங்­கி­ய­தாக விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

நடிகர் கலா­பவன் மணி கடந்த 6ஆம் திகதி மது அருந்­திய நிலையில் உயி­ரி­ழந்தார். அவ­ரது உடலை பரி­சோ­தனை செய்த மருத்­து­வர்கள் அவர் அருந்­திய மதுவில் அள­வுக்கு அதி­க­மாக மெத்­தனால் அல்­கஹால் இருந்­த­தாக தெரி­வித்­தனர். மேலும் அனு­மதி பெற்று விற்­கப்­படும் மதுவில் இவ்­வ­ளவு அதிக அளவில் மெத்­தனால் அல்­கஹால் இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறி­னார்கள். இது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

கலா­பவன் மணியின் வயிற்­றுப்­ப­குதி இர­சா­யன ஆய்­வுக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டது. இந்த ஆய்வில் அவ­ரது உடலில் பூச்சி மருந்து கலந்து இருந்­த­தாக திடுக்­கிடும் தகவல் வெளி­யாகி இருக்­கி­றது. மதுவில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து இருக்­கலாம் என்று சந்­தேகம் எழுந்­துள்­ளது. இதனால் இந்த வழக்கில் மீண்டும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. கலா­பவன் மணி மரணம் அடை­வ­தற்கு முன்­தினம் அவ­ருடன் மலை­யாள நடி­கர்கள் சாபு, ஜாபர் இடுக்கி ஆகியோர் தங்கியிருந்­த­தாக தகவல் கிடைத்­தது. பொலிஸார் அவர்­க­ளிடம் விசா­ரணை நடத்­தினர். ‘‘கலா­பவன் மணி மது அருந்­தி­ய­போது நான் அங்­கி­ருந்து சென்று விட்டேன்’’ என்று சாபு வாக்­கு­மூலம் அளித்தார்.

ஜாபர் இடுக்கி, ‘‘நாங்கள் எல்­லோரும் சேர்ந்து மது அருந்­தினோம்’’ என்று கூறினார். நடிகர் சாபு­வுக்கும், கலா­பவன் மணிக்கும் ஏற்­க­னவே முன் விரோதம் இருந்­த­தாக இணை­ய­த­ளங்­களில் தகவல் பர­வி­யது. இதனை சாபு மறுத்­துள்ளார். ‘‘கலா­ப­வன் ­மணி மர­ணத்தில் தேவை­யில்­லாமல் என்னை சம்­பந்­தப்­ப­டுத்­து­கி­றார்கள். அவ­ருடன் நான் மது அருந்­த­வில்லை’’ என்று கூறினார்.

இந்த வழக்கில் திடீர் திருப்­ப­மாக தற்­போது அருண், விபின், முருகன் ஆகிய 3 பேரை பொலிஸார் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர். இவர்கள் கலா­பவன் மணி வீட்டில் வேலை பார்த்­த­வர்கள். கலா­பவன் மணி மருத்­து­வ­ம­னையில் இறந்­ததும் இவர்கள் 3 பேரும் அவ­ச­ர­மாக பண்ணை வீட்­டுக்கு திரும்பி வீட்டை சுத்­தப்­ப­டுத்தி உள்­ளனர்.

மது போத்­தல்­களை அப்­பு­றப்­ப­டுத்தி உள்­ளார்கள். கலா­பவன் மணி வாந்தி எடுத்­த­தையும் கழுவி சுத்­தப்­ப­டுத்தி உள்­ளனர். தட­யங்­களை இவர்கள் 3 பேரும் அழித்­த­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றது. 3 பேரிடம் தீவிர விசா­ரணை நடந்து வருகி­றது. மேலும் பொலிஸார் சம்­பவம் நடை­பெற்­ற­தாக கூறப்­பட்ட பண்ணை வீட்டை சோதனை செய்­தனர். அந்த வீட்டில் இருந்து பூச்சிக் கொல்லி மருந்து போத்­தலை கைப்பற்­றினர்

மேலும் ஒரு புதிய திருப்பமாக கலாபவன் மணியின் உடலில் கலந்திருந்ததாக கூறப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை அவரது மாமனார் கடையில் வாங்கியதாக குறித்த மருந்தை விற்பனை செய்த கடைக்காரர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.