(இரோஷா வேலு) 

மிஹிந்தலை, கள்ளஞ்சிய பகுதியில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பொண்ணொருவரை நேற்று மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

கள்ளஞ்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இப்பெண்ணை கைதுசெய்ய சென்றிருந்து மிஹிந்தலை பொலிஸாருக்கும் குறித்த சட்டவிரோத மதுபான விற்பனை செய்யும் பெண்ணின் ஆதரவாளர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது. 

எனினும் பொலிஸாரின் அதிரடி செயலால் குறித்த பெண் 161 லீட்டருக்கும் அதிகமாக 215 சட்டவிரோத மதுபான  போத்தல்களுடன் இவர்  கைதுசெய்யப்பட்டார். 

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை அனுராதபுர நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.