(இரோஷா வேலு) 

களுத்துறை பாலத்தினருகில் பூக்கடையில் வியாபாரம் பார்த்து வரும் பெண்ணொருவர் மீது அப்பெண்ணின் கணவன் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் குறித்த பெண் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நேற்று மாலை 6.25 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதனையடுத்து காயங்களுக்குள்ளான பெண்ணை உடனடியாக நாகொட  வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லைகையிலேயே அவர் இவ்வாறு மரணமடைந்துள்ளார். 

உயிரிழந்த பெண்ணுக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் காணப்பட்டுவந்த கள்ளத்தொடர்பு குறித்து அறிந்துகொண்ட கணவன் ஆத்திரமடைந்த நிலையிலேயே இவ்வாறு கொலை முயற்சி மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரை கைதுசெய்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.