அமெரிக்காவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்து, நிர்வாணமாக புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்த நபரொருவரின் வெறிச்செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த அலிஸ்ஸா நோசிடா என்ற 18 வயது பெண் தன்னுடைய வீட்டில் காதலனுடன் சேர்ந்து போதை பொருள் உட்கொண்டுள்ளார்.

இதன் அளவு அதிகமானதால் மூச்சுத்திணறி உயிருக்கு போராடியுள்ளார். உடனே காதலன் உதவி செய்வான் என எதிர்பார்த்திருக்கும் போது, 20 வயதுடைய பிரையன் வரேலா தன்னுடைய காதலியை துஸ்பிரயோகம் செய்துள்ளான்.

இதற்கிடையில் அலிஸ்ஸாவின் உயிர் பிரிந்த்துள்ளது. உடனே அவரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்துள்ளான்.

பின்னர் அவளுடைய உடலை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் போது பொலிசார் அவனை கையுங்களவுமாக பிடித்துள்ளனர். 

மேலும், “என் முட்டாள்தனமான செயல்களுக்காக நான் வருந்துகிறேன்” என குற்றவாளி நீதிமன்றத்தில் கூறியுள்ளான்.

வழக்கு விசாரணைகளை கேட்டறிந்த நீதிபதி, குற்றவாளிக்கு 34 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.