இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத்தில் டோனி தலை­மை­யி­லான இந்­திய அணி ‘குரூப் – 2’ பிரிவில் இடம் பெற்­றுள்­ளது. அவுஸ்­தி­ரே­லியா, பாகிஸ்தான், நியூ­ஸி­லாந்து, பங்­க­ளா தேஷ் ஆகிய அணி­களும் அந்த பிரிவில் உள்­ளன.

இந்­திய அணி தொடக்க ஆட்­டத்தில் நியூ­ஸி­லாந்­திடம் 47 ஓட்­டங்­களால் தோற்­றது. 2ஆவது போட்­டியில் பாகிஸ்­தானை 6 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வீழ்த்­தி­யது.

இந்­திய அணி 3ஆவது போட்­டியில் இன்று பங்­க­ளா­தேஷை எதிர்­கொள்­கி­றது.

அரை இறு­திக்­கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்க இந்­திய அணி பங்­க­ளா­தேஷை கண்­டிப்­பாக வீழ்த்­தி­யாக வேண்டும்.

இந்­திய அணி சமீ­பத்தில் ஆசியக் கிண்ண ‘லீக்’ மற்றும் இறுதிப் போட்­டியில் பங்­க­ளா­தேஷை வீழ்த்தி இருந்­தது. இதனால் நம்­பிக்­கை­யுடன் இருக்­கி­றது.

பங்­க­ளாதேஷ் தான் மோதிய 2 போட்­டி­க­ளி லும் தோற்று இருக்கிறது. நெருக்கடியில் இருக்கும் அந்த அணி இந்தியாவை வீழ்த்த கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.