பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைகள் மிகவும் துரிதமாக மேற்கொள்ளப்படுவதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அத்துடன்  குறித்த வேலைத்திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேற்றுநேரடியாக சென்று பார்வையிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் ஒருகட்டமாக நேற்று இத்தாவில் பகுதியின் நல்லம்மா தோட்ட பிரதான வீதியின் புனரமைப்பு பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

அங்கு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உபதவிசாளர் கஜன், உறுப்பினர்களான ரமேஷ், வீரவாகுதேவர்,கோகுல்ராஜ் ஆகியோரும் கிராம மட்ட அமைப்பினரும் கலந்துகொண்டனர்.