சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றினை கொண்டுவரவுள்ளதாக ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டுவாரங்களாக இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்பதை அடிப்படையாக வைத்தே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாங்கள் ஏனையவிடயங்கள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் கூடிய விரைவில இது குறித்து தீர்மானிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் பாரளுமன்ற நடைமுறைகள் அனைத்தையும் புறக்கணித்துள்ளார் இதன் காரணமாக ஜனாதிபதி சபாநாயகரை பாராளுமன்ற நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளையும் நாங்கள் நிராகரிப்போம் ,சபாநாயகர் உரிய முறையில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்தும் வரை அனைத்து அமர்வுகளையும் நாங்கள் நிராகரிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.