பக்கச்சார்பான முறையில் நடந்துகொள்ளும் சபாநாயகர் காரணமாகவே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் இரண்டும் பிழையான நடைமுறையை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டுள்ளன என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்துவதே தற்போதைய சூழலில் இடம்பெறக்கூடிய சிறந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
பேட்டியொன்றில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்ஃ
பிரதமருக்கு எதிரான இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களும் தவறான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள பசில் பக்கச்சார்பான முறையில் நடந்துகொள்ளும் சபாநாயகர் காரணமாகவே இந்த நிலையேற்றபட்டது எனவும் தெரிவித்துள்ளார்..
முதலாவது தீர்மானம் ஜனாதிபதிக்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்தது இது சபாநாயகரிற்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பில் இதற்கு இடமில்லை என்பதும் சபாநாயகரிற்கு நன்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது தடவை அவர்கள் ஜனாதிபதியின் பிரகடனம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியிருந்தனர் சபாநாயகர் தான் பிரதமரையோ அல்லது அமைச்சர்களையோ அங்கீகரிக்கவில்லை என குறிப்பிட்டார் பின்னர் அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதியளித்தார் எனவும் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் குரல்மூல வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்த சபாநாயகர் அதனை பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார் என பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதுடன் சபாநாயகர் யார் பக்கம் நின்கின்றார் என்பதற்கு இதனை விட வேறு எந்த
பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்துவதே தற்போதைய சூழலில் இடம்பெறக்கூடிய சிறந்த விடயம் என குறிப்பிட்டுள்ள பசில் ராஜபக்ச மக்கள் தீர்மானிக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
யாரை தெரிவு செய்வது என்பதற்காக வாக்களிப்பதே மிகப்பெரும் மனித உரிமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை ஏன் எவராவது எதிர்க்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள பசில்ராஜபக்ச அவ்வாறு எதிர்ப்பவர்கள் தேர்தலை பார்த்து பயப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சோல்பரி யாப்பின் காலத்திலிருந்து இலங்கை பிரதமர் ஒருவரை ஒருபோதும் தெரிவு செய்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ள பசில் ராஜபக்ச தற்போதைய அரசமைப்பின் கீழ் பிரதமரை நியமிப்பது ஜனாதிபதியின் பொறுப்பு அதற்கான அதிகாரம் அவரிற்கு வழங்கப்பட்டுள்ளது எனதெரிவித்துள்ளதுடன் சபாநாயகர் தெரிவிப்பது போன்று எப்படி பாராளுமன்றம் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய அரசாங்கத்தை அமைத்தமை குறித்து கருத்து தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச எங்களால் காத்திருக்க முடியாத நிலை காணப்பட்டது,நாட்டின் சொத்துக்கள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன,மக்கள் மீது வரிச்சுமைகள் சுமத்தப்பட்டுக்கொண்டிருந்தன, எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன அடுத்த ஒருவருடத்தில் நாட்டில் எதுவும் இருக்காது என்ற நிலை காணப்பட்டது எனகுறிப்பிட்டுள்ள பசில் ராஜபக்ச ஜனாதிபதி கொலை சதியை ஐக்கியதேசிய கட்சி புறக்கணித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமூகத்துடனான உறவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச ஜிஎல்பீரிஸ் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது ஜனாதிபதி எங்கள் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் என குறிப்பிட்டுள்ளார்
சிலர் ஏன் எங்களால் சில மாதங்கள் பொறுக்க முடியவில்லை என கேட்டனர் நாங்கள் காரணத்தை முன்வைத்தோம், நாங்கள் மக்களிடம் செல்ல விரும்புகின்றோம் அவர்கள் தீர்மானிக்கட்டும் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM