ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக ராணுவம் மேற்கொண்ட  தாக்குதல்களில் 69 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீத பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று காலையில் முதல் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரமாக லக்மன், நன்கர்ஹர், பக்டிக்கா, காஸ்னி, மைடான் வர்டக், கந்தஹார், உருஸ்கான், ஃபரா, கோர், டக்ஹர், ஃபர்யாப், ஹேம்லன்ட், நிம்ரோஸ் ஆகிய மாகாணங்களில் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் 69 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு சுமார் 20 தீவிரவாதிகள் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அப்பகுதிகளில் இருந்த தலிபான்களின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் இந்த தாக்குதல் அழிக்கப்பட்டன என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன