முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத் துப்பரவுப் பணிகள் மீண்டும் இன்று இடம்பெற்றுள்ளன.கடந்த 2018.10.27ஆம் நாள் அன்று துப்பரவுப்பணிகள் இடம்பெற்றிருந்தன. இதன் தொடர்சியாகவே 2018.11.17 இன்றைய நாள் துப்பரவுப்பணிகள் இடம்பெற்றுள்ளன.மேலும் துப்பரவுப்பணியில் கலந்துகொண்ட மக்கள், துயிலுமில்லத்தில் இருக்கும் இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தனர்.இந்த துப்பரவுப்பணிகளை அந்தப்பகுதி மக்கள் பலர் ஒன்றுகூடி மேற்கொண்டனர். 

அவர்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.