ஹொரன பிளான்டேசனுக்குட்பட்ட சாமிமலை கவரவில தோட்ட 2ஆம் பிரிவில் இன்று காலை 9 மணியளவில் குழந்தைகளை காப்போம் (save the children) நிறுவன தலைவி யாகுலின் தலைமையில் தோட்ட தொழிலாளர்களின் மத்தியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தோட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் குழந்தைகளை காப்போம் நிறுவன தலைவி யாகுலின் செனரத் தனது கருத்தை தெரிவிக்கையில், எதிர்கால சந்ததியினர் சுகாதாரமாக வாழ்வதற்கு வழி செய்வற்காகவே இவ்வாறான நிகழ்ச்சிகளை நாம் பெருந்தோட்ட பகுதிகளில் செய்து வருகின்றோம்.இதன் மூலம் எதிர்கால குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும் அவர்களின் சுகாதாரம் பேணவும் அவர்களுக்கு எவ்வாறான சத்துணவுகள் வழங்க வேண்டும் என்பதை நிகழ்ச்சிகள் மூலம் கலந்து கொண்ட பெருமளவான மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதில் ஐயமில்லை என தெரிவித்தார்.