தல அஜித் நடிப்பில் தயாராகி வரும் விஸ்வாசம் படத்தைப் பற்றி புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 

இப்படத்தின் படபிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது என தெரிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்திற்காக புதிய பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் விவேகா.

இது குறித்து அவருடைய ட்வீட்டரில்,‘

இன்று விஸ்வாசம் படத்திற்காக புதிய பாடலுக்கு பணியாற்றவிருக்கிறேன். இசையமைப்பாளர் டி இமான் அற்புதமாக இசையமைத்திருக்கும் மெலோடி ட்ரேக்கிற்கு பாடல் எழுதவிருக்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். பாடலாசிரியர் விவேகா, ஏற்கனவே தல அஜித்தின் படத்திற்கு பாடல்கள் எழுதி, அந்த பாடல்கள் அனைத்து பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

தல ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாகும் என்பது இதுவரை உறுதியாக தெரிவித்து வருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

தல அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கும் விஸ்வாசம் படத்தில் அவருடன், நயன்தாரா, அனிகா, விவேக், ரோபோ சங்கர், தம்பி ராமையா, யோகி பாபு, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.