(எம்.மனோசித்ரா)

எம்மை அடைமானம் வைத்து எமது பெயரில் ஜனநாயகத்தையும் மக்கள் பிரதிநிதியின் கண்ணியத்தையும் கலங்கத்தை ஏற்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகளை வீரர்களாக உயர்த்திப்பிடிக்காமல் கட்சி நிற பேதமின்றி அவர்களை நிராகரிப்பது பிரஜைகளின் பொறுப்பு என்பதை நாம் வலியுறுத்துவதாக கோரிக்கை  மார்ச் 12 அமைப்பு விடுத்துள்ளது.அரசியல் கட்சிகள் தத்தமது  தேவைக்கு அமைய அரசியலமைப்பையும் சட்டத்தையும் தமது விருப்பத்தின்படி பொருள் விளக்கம் அளிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தமது தனிப்பட்ட நலனுக்காக அடிக்கடி தாவுகின்ற ஜனநாயக வழியில் பிரச்சினைகளை தீர்க்கமுடியாத ஒழுக்கக்கேடான அரசியல்வாதிகளை நாட்டின் அதிஉயர் பீடத்திற்கு தெரிவுசெய்துள்ளதையிட்டு நாம் வெட்கப்படவேண்டும் எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.