வடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குமாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளனம் கோரிக்கை விடுத்து  அறிக்கை ஒன்றினை வடமாகாண ஆளுநருக்கு வழங்கியுள்ளது. 

இது தொடர்பில் கூட்டுறவுச் சங்கத்தின தலைவர் கருத்துத் தெரிவிக்கையில்  

வடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குமாறு நாளொன்றுக்க இரண்டயிரதம் ரூபா வீதம் வழங்குகுமாறும் கோரிக்கையை விடுத்துள்ளதுடன் , தற்பொழுது வடக்கில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் ஒருவாரகாலமாக கடற்றொழிலுக்கு செல்லாது படகுகளை கடற்கரையில் நங்கூரமிட்டு வைத்திருக்கின்றார்கள். 

தற்பொழுது இடம்பெற்ற கஜா சூறாவளியினால் 30177 கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது. 

அவர்களின் நாளாந்த தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வரட்சி நிவாரணம் வழங்குவது போன்று கடற்றொழிலாளர்களுக்கும் உலர் உணவினை நாளொன்றக்கு இரண்டாயரம் ரூபாவீதம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக தங்களின் விசேட அதிகாரத்தினை பயன்படுத்தி அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்,  

மேற்படி கோரிக்கைகள் கடிதம் மூலமாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.