(எம்.மனோசித்ரா)

"ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த 2015 ஆம் ஆண்டு சதித்திட்டம் தீட்டி ஆட்சிக்கு வந்ததைப் போன்று தற்போதும் சர்வதேச நாடுகளின் உதவியோடு அதே போன்று சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கின்றார்" என லங்கா சமசமாஜக் கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி நிலை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் மூலம் புதிய லிபரல் வாதத்தையும் நாட்டில் ஏற்படுத்த ஐக்கிய தேசிய கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனவும் மேலும் தெரிவித்தார்.