அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால்   ஆயிரத்திற்கு  மேற்பட்டோர் காணாமல் போயிலுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிலுள்ளனர்.

 குறித்த  தீ விபத்தில் சுமார் 12000த்துக்கு மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளது.

கலிபோர்னியா வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத்தீயாக கருதப்படுகிறது.

மேலும் குறித்த  தீ சூழ்ந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த 1000 க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைப்பு பணியில் அமெரிக்காவின் பல பகுதிகளிலுமுள்ள தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இக் காட்டுத்தீயானது 1 லட்சத்து 25000 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளதோடு 30சதவீதமான காட்டுத்தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.