இந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக விஷம் என பொருள்படும் டோக்ஸிக் என்ற வார்த்தையை  ஒக்ஸ்போர்ட் அகராதி தேர்வு செய்துள்ளது. 

கடந்த 11 வருடங்களாக அந்தந்த ஆண்டின் சிறந்த வார்த்தைகளைன ஒக்ஸ்போர்ட் அகராதி வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டின் சர்வதேச வார்த்தையாக toxic என்னும் வார்த்தையை தேர்வு செய்துள்ளதாக ஒக்ஸ்போர்ட் அகராதி  வெளியிட்டுள்ளது.

டோக்ஸிக் என்றால் விஷம் என பொருள். இது இலத்தீன் மொழியில் டோக்ஸியஸ் என்ற சொல்லில் இருந்து உருவானது. 17 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்த வார்த்தை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த ஆண்டு இந்த வார்த்தையைப் பற்றி அதிகம் பேர் விவாதித்ததாக ஒக்ஸ்போர்ட் கூறியுள்ளது. அதனாலேயே இந்த வார்த்தையை இந்தாண்டின் சிறந்த வார்த்தையாக தேர்வு செய்ததாக ஒக்ஸ்போர்ட் விளக்கமளித்துள்ளது.