பாகிஸ்தானின் தரமற்ற போலி மதுபானம் அருந்திய 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் டண்டோ முகமது கான் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 35 பேர் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த 6 பெண்கள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் ஏஜெண்ட் ஒருவரின் மூலமாக தரமற்ற போலி மதுபானங்களை வாங்கி அருந்தியதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், போலி மதுபானங்களை விற்பனை செய்யப்படுவதை தடுக்க பொலிஸார் தவறிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு போலி மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.