வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது வர்த்தக நிலையத்திலிருந்த பொருட்களை சேதப்படுத்துயும் வர்த்தக நிலையத்தை அடித்து நொருக்கியும் அங்கிருந்தவர்களை வெட்டி காயப்படுத்தியும் உள்ளனர்.

இச் சம்பவம் கஜா புயல் தாக்கம் ஏற்பட்ட கடந்த வியாழக்கிழமை இரவு இமையாணன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது.

கடந்த வியாழக்கிழமை முகமூடிகளை அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு கொண்டு வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் ஒரு குழுவினர் வந்து இறங்குயுள்ளனர்.

இதன் போது அங்குள்ள வர்த்தக நிலையமொன்றை அடித்து நொருக்கி அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்துயுள்ளனர். 

இவ்வாறு அட்டகாசத்தில் வாள்வவெட்டுக் கும்பல் ஈடுபட்டதுடன் அங்கிருந்தவர்களை வாள் கொண்டு அச்சுறுத்தியுள்ளனர். 

இந்தக் கும்பலின் அட்டகாசங்கள் அங்கிருந்த  சீ.சீ.ரீ.வீ கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது 

இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள வர்த்தக நிலைய மொன்றையும் நீக்கியுள்ளார். இதனால் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.