பாராளுமன்றில் சட்டரீதியாக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமாயின் பதவியை துறக்க தயாராக இருந்ததாக நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவது பிரச்சினையல்ல என்றும் ஆனால் பாராளுமன்றிற்கு கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை எடுத்து வருவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனாலும் சபாநாயகர் அதற்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையோ ஒழுக்காற்று நடவடிக்கையோ எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக பாராளுமன்றில் தொடர்ந்து செயற்படுவார்களாயின் எமது தரப்பினரும் அதற்கு ஏற்ற வகையில் பதில் வழங்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.