பிரசாந்த் நடிப்பில் தயாரான ஜானி படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.

டொப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில், அவரது தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரிப்பில் உருவான படம் ஜானி. கள்ளநோட்டை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தில் பிரசாந்துடன் பிரபு, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குநர் வெற்றி செல்வன் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் டீஸர் வெளியாகி ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ஜானி படத்தின் டிரைலரும் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

இதனிடையே அண்மையில் ராம்சரண் நடித்த தெலுங்கு படத்தின் டீஸரில் பிரசாந்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கும் நிலையில் ஜானி படத்தின் டிரைலர் வெளியானதால் பிரசாந்தின் ரசிகர்கள் சமாதானமடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.