ஒவ்வொரு பருவத்திலும் மக்களை ஒவ்வொரு வகையினதான நோய்களின் தாக்கம் இருக்கும். அதிலும் குளிர்காலத்தில் இளம் பெண்களில் பலர் Seasonal Affective Disorder என்ற பாதிப்பிற்கு ஆளாகுவார்கள். 

உலகத்தில் இரண்டு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் இத்தகைய பருவ காலங்களில் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்த பாதிப்பு பதினெட்டு வயது முதல் முப்பது வயது வரையுள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது. குளிர்காலங்களில் ஐந்து பெண்களில் நான்கு பெண்கள் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகக்கூடும். இந்த பாதிப்பு தற்காலிகமானது தான் என்றாலும், பருவ நிலை மாறிவிட்டால் இத்தகைய பாதிப்பு இயல்பாக குறைந்துவிடும். 

சிலருக்கு இந்த பாதிப்பு மிதமான மன அழுத்தத்தை கொடுக்கும். இதன் காரணமாக சிலருக்கு நடத்தையில் மாற்றம் ஏற்படக்கூடும். இவர்கள் இதனை அலட்சியப்படுத்தாமல் உளவியல் சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.

இதன் போது இளம்பெண்களுக்கு காலையில் தாமதமாக எழுந்திருக்கவேண்டும் என்று தோன்றும். எழுந்தவுடன் fhர்ப்போஹைட்ரேட் சத்து மிக்க உணவு வகைகள் மீது தனி நாட்டம் கொள்வார்கள். தங்களின் உடல் எடையை அதிகரிக்க அனுமதிப்பர். இவர்களது கால்கள் மற்றும் தோள்பட்டைகள் அதிக சுமையுடன் இருப்பதாக உணர்வார்கள். கோடை காலங்களில் இவர்கள் இதற்கு நேர் எதிர்மாறாக நடந்து கொள்வர்.

இவர்கள் போதுமான சூரிய ஒளி தம்மீது படுமாறு நடவடிக்கை எடுக்கவேண்டும். வீட்டில் இருக்காமல் சூரிய ஒளி அதிகமிருக்கும் பகுதிகளில் பயணிக்கவேண்டும். திறந்தவெளியில் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடலாம். சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும். இதற்கென இருக்கும் பிரத்யேக தெரபியை மேற்கொள்ளவேண்டும்.

டொக்டர் ராஜ்மோகன்

தொகுப்பு அனுஷா.