(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனநாயகத்துக்கு எதிராக மிலேச்சத்தனமான அரச பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டினதும் பாராளுமன்ற ஜனநாயகத்தினதும் கறுப்பு தினமாகவே பார்க்கப்படுகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அத்துடன் அரசியலமைப்பின் 48 ஆம் உறுப்புரையின் 2 ஆவது சரத்தின் பிரகாரம்  சர்ச்சைக்குரிய ராஜபக்ஷ அரசாங்கம் நம்பிக்கை இல்லா பிரேரணையின் மூலம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்த வெற்றிடத்தை உடனடியாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்ற தரப்புக்கு தெரிவித்து அதனை நிரப்புகின்ற பணியை அரசியலமைப்பின் பிரகாரம் செய்வார் என்று எதிர்பார்க்கின்றோம்.

பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் உறுப்பினர் அறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.