பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணை­களை மேற்­கொள்ள நிய­மிக்­கப்­பட்­டுள்ள சிறப்பு மேல் நீதி­மன்றம் முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்க முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு நீதி­மன்றம் அறி­வித்தல் விடுத்­துள்­ளது.

விசேட மேல் நீதி­மன்றின் ஆணை­யாளர் ஐராங்­கனி பெர்­னாண்டோ இதற்­கான அறி­வித்­தலை விடுத்­துள்ளார். எதிர்­வரும் மே மாதம் 3 ஆம் திகதி இவ்­வாறு மன்றில் ஆஜ­ராகி சாட்­சி­ய­ம­ளிக்­கு­மாறு சிறப்பு மேல் நீதி­மன்­றினால் அறி­வித் தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ரஜ­ப­க்ஷவை கொலை செய்­வ­தற்­காக கொழும்பு, பித்­தல சந்­தியில் நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலை நடத்­திய குண்­டு­தா­ரிக்கு உதவி ஒத்­தா­சை­களை செய்த குற்றச் சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ள ஐவ­ருக்கு எதி­ரான வழக்கில் முறைப்­பாட்­டாளர் தரப்பு சாட்சியாக சாட்சியமளிக்கவே கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இந்த அறிவித் தல் விடுக்கப்பட்டுள்ளது.