வட மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கு­வதை எதிர்க்­க­வில்­லை­யெனத் தெரி­வித்த மஹிந்த அணி ஆத­ரவு எம்.பி. வாசு­தேவ நாண­யக்­கார அதி­கா­ரத்தை பர­வ­லாக்­கு­வதால் மட்டும் நாடு முன்­னேற்­ற­ம­டை­யாது என்றும் குறிப்­பிட்டார்.

இது தொடர்­பாக வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி.மேலும் தெரி­விக்­கையில்,

இலங்­கையில் ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பே உள்­ளது. அதற்­க­மை­யவே தற்­போது அதி­கா­ரங்கள் பர­வ­லாக்­கப்­பட்­டுள்­ளன.

எனவே இந்த அதி­கா­ரங்­களை மேலும் பர­வ­லாக்க வேண்டும். பலப்­ப­டுத்த வேண்டும். இதில் தவ­றில்லை. அதே­வேளை வடக்கு, கிழக்கு உட்­பட அனைத்து மாகாண சபை­க­ளுக்கும் காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும்.

இதனை நான் எதிர்க்­க­வில்லை. ஆனால் மத்­திய அரசு தனது ஆதிக்­கத்தின் கீழ் இந்த அதி­கா­ரங்­களை வைத்துக் கொண்டு தான் பர­வ­லாக்க வேண்டும்.

அதா­வது எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மத்­திய அரசு மீளப் பெற்­றுக்­கொள்ளும் விதத்தில் காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும்.

அதி­கா­ரங்­களை பர­வ­லாக்­கு­வதன் மூலம் மட்டும் நாடு முன்­னேறும் என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

மாறாக வச­தி­ப­டைத்தோர் வசதி இல்­லாதோர் இடை­வெளி நிரப்பப்பட வேண் டும்.

உற்பத்திகள் அதிகரிக்கப்படவேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மூலமே நாடு முன்னேற்றமடையும் என்றார்.