பாராளுமன்றில் இன்று மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டார்கள். பொலிஸாரின் கடுமையான பாதுகாப்பு மிளகாய்தூள் தாக்குதல்களுக்கு மத்தியிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்றினோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூன்று முறை நிiவேற்றப்பட்டுள்ளது. பெரும்பான்மை இல்லாமலேயே இவ்வாறு அராஜகம் நடந்துகொண்ட இவர்கள், வாக்கெடுப்பை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்பட்டார்கள்.

இந்நிலையில் எவ்வாறு சாதாரண தேர்தலை நாட்டில் நடத்த முடியும். 225 பேருக்கு மத்தியில் தேர்தலை நடத்திகொள்ள வாய்ப்பு தராத இவர்களிடம் நாடளாவிய ரீதியில் எவ்வாறு தேர்தலை நடத்த முடியும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இந்த தருணம் மிகப் பெரிய இருண்ட யுகமாகவும் கருப்பு புள்ளியாகவும் மாறியுள்ளது.

யாரிடம் பெரும்பான்மை இருக்கின்றது என நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று எமக்கு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இன்று பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றிக்கொள்ள மன்றுக்கு வருகைதந்தோம் என்றார்.