கஜா புயலின் தாக்கம் நேற்று இரவு வடக்கின் பல பிரதேசங்களிலும் உணரப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவில் பெரியளவிலான சேதங்களை கஜா புயல் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு கடற்கரை பிரதேசம் தற்பொழுது அமைதியான சூழலாக காணப்படுகின்றது.

இதேவேளை, இன்று அதிகாலை முல்லைத்தீவு கடற்கரை பிரதேசம் எங்கும் செந்நிறமான தோற்றத்துடன் காட்சியளித்துள்ளதுடன் கடலின் சீற்றம் குறைவடைந்திருந்தது.மேலும், கஜா புயலால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.