கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்படவில்லையாம்.  பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எவ்வித இணக்கப்பாடும் எட்டவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெற்றது.

இதேவேளை இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.