(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.  

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி நிலை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் இந்த சதித்திட்டங்களுக்கு அமெரிக்க மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் உதவி புரிந்து வருகின்றன. இதன் மூலம் புதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

அத்துடன் பாராளுமன்றத்தில் பிரதானமானவரான சபாநாயகருக்கே பாராளுமன்றத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் விதிமுறைகள் பற்றி தெளிவுபடுத்த தேவை தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.