கஜா புயல்  100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் தமிழகத்தின் அதிராம்பட்டினத்தினூடாக இன்று காலை 9 மணியளவில் கரையை கடந்தது.100 கிலோ மீற்றர் வேகத்துடன் அதிராம்பட்டினத்தின் கரையை கடந்தது கஜா புயல் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களைச்சேர்ந்த மக்களை அச்சுறுத்தியநிலையில்  புயலின் சீற்றத்தினால் 9 பேர் பலியாகியுள்ளனர். 

சில மாவட்டங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 தற்போது நிலப்பரப்பை நோக்கி புயலின் தாக்கம் நகர்ந்து வருவதால் சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

அதிராம்பட்டினத்தில் 16 சென்றிமீற்றர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. சில மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை பெய்யும் வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.