பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் சபாநாயகர் கருஜெயசூரிய  11.30 மணிக்கு கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமளிதுமளியை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்றும் மீண்டும் கூடவுள்ள நிலையிலேயே சபாநாயகர் கட்சிதலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றைய தினம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான மற்றுமொரு நம்பிக்கiயில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பிற்கு எடுக்கப்படவுள்ள நிலையிலேயே சபாநாயகர் கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்