சூரிய மண்­ட­லத்­திற்கு  அரு­கி­லுள்ள நட்­சத்­தி­ர­மொன்றை  வலம் வரும் உயிர் வாழ்க்­கைக்கு சாத்­தி­ய­மான  புதிய கோள் ஒன்றை  விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

 பூமியை விடவும் 3.2  மடங்கு பெரி­தான  மேற்­படி கோள்  எமது சூரிய மண்­ட­லத்­தி­லி­ருந்து  6  ஒளி­யாண்­டுகள் தொலைவில் அமைந்­துள்ள பேர்னார்ட் என்ற  நட்­சத்­தி­ரத்தை  சுற்றி வலம் வரு­கி­றது.

சூப்பர் பூமி என  செல்­ல­மாக அழைக்­கப்­படும் இந்த கற்­பா­றை­யா­லான கோளில்  உயிர் வாழ்க்­கைக்கு அவ­சி­ய­மான  நீர் மற்றும் காப­னீ­ரொட்சைட் என்­ப­வற்றைக் கொண்ட வளி­மண்­டலம் காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பேர்னார்ட் நட்­சத்­தி­ரத்தின் பி கோள் என குறிப்­பி­டப்­படும் இந்தக் கோளின்   வளி­மண்­டல அடர்த்தி  எமது பூமியின் வளி­மண்­டல அடர்த்­தியை  விடவும் மூன்று மடங்கு அதி­க­மாகும்.

மேலும் இந்தக் கோள் தனது தாய் நட்­சத்­தி­ரத்தை வலம் வரு­வ­தற்கு 233  நாட்­களை எடுத்துக் கொள்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.