சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை தங்க பிஸ்கட்களை கடத்திவர முற்பட்ட மூவர்  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். 

கண்டி, அக்குறணை பகுதிகளைச் சேர்ந்த 48 வயது, 46வயது, மற்றும் 44 வயதான மதிக்கதக்க வியாபாரிகளே  இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த விமானத்தில் வந்திறங்கிய குறித்த 3 நபர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களை சோதனையிட்டபோது  அவர்களினால் மறைந்துக் கொண்டுவரப்பட்ட  ஒரு தொகை தங்க பிஸ்கட்களை கைப்பற்றியுள்ளனர். 

இவ்வாறு கைப்பற்றிய தங்க பிஸ்கட்டகளின் பெறுமதி சுமார் ஒரு கோடியே  43 இலட்சத்து 98 ஆயிரத்து 860 ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொன்றும் 100 கிராம் பெறுமதியான  24 தங்க பிஸ்கட்களை இரண்டாக வெட்டி உலோக குழாயில் மறைத்துக்கொண்டு வந்துள்ளனர். 24 தங்க பிஸ்கட்டுகளின் மொத்தநிறை 2 கிலோ 400 கிராம் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.