(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

மேலும் அரசியல் அமைப்புக்கு முரணான வகையில் செயற்பட்டு மேலும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட ஆளும் எதிர்க்கட்சி மோதலை அடுத்து  பாராளுமன்ற கட்டடத் தொகுதியில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்  சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் தேர்தல்களுக்குப் பயப்படவில்லை. ஆனால், அது சட்டப்பூர்வமான அரசின் கீழும், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கீழும் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.