மாத்தலை பௌத்த மந்திர மண்டபத்தில் மாத்தலை ஸ்ரீ புன்னியவர்தன சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக  புலமைப்பரிசில் வழங்கும்  நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் பி. பீ. திசாநாயக்கா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

விசேட தேவையுடையவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஒழுங்கு படுத்தப்பட்ட  இவ்வைபவத்தில் இரத்தோட்டை கொஸ்வான விசேட தேவையுடையோர் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் ஐவருக்கு முழுநேர புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

 இப்புலமைப்பரிசில்களை மாத்தலை நொரிடாகே போசிலேன் மட்பாண்ட நிறுவனம் வழங்கியிருந்தது.