(நா.தனுஜா)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுத்தேர்தல் ஒன்றின் மூலமாக மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என அமைச்சர் எஸ்.பி.திஸாநயாக்க தெரிவித்தார். 

அத்துடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் பாராளுமன்றம் கூட்டப்பட்டமை சட்டத்திற்கு முரணாகும். 

எனவே அங்கு இடம்பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பினையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் இன்று காலை கூட்டப்பட்ட போது ஏற்பட்ட குழப்ப நிலையினைத் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.