(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.எம்.வஸீம்)

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்த அமைச்சர் உதய கம்பன்பில, குறித்த பிரேரணை அங்கிகரித்துக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவிக்கவும் இல்லை எனவும் தெரிவித்தார். 

அத்துடன் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை என்ற அறிவித்தலை சபாநாயகர் நேற்று அறிவிக்கும்போது அமெரிக்க துதூவர் மகிழ்ச்சியில் கை தட்டும் காட்சியை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. 

யார் ஆட்சி செய்தாலும் வெளிநாடுகள் அந்த அரசாங்கத்துக்கே தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்திவருவார்கள். ஆனால் அரசாங்கத்தின் பிரகாரம் அந்த நிலை மாறமுடியாது. 

இதன் மூலம் இந்த நாட்டை இதுவரை ஆட்சிசெய்துவந்தது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசாங்கம் என்றும் தற்போது ஆட்சிசெய்ய எதிர்பார்த்திருப்பது மேற்கத்திய நாடுகளுக்கு எமது நாட்டின் பொருளாதார வளங்களை சூறையாடும் அரசாங்கம் என்பது இவர்களின்  மகிழ்ச்சியின் மூலம் உறுதியாகின்றது எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு இன்று முடிவடைந்த பின்னர் ஆளுங்கட்சியினால் உறுப்பினர் அறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.