இது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி எமது உயிரைத் துறக்கவும் தயாரென ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்றில் கட்சி சார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் வாக்கெடுப்பிற்கு பயமில்லாத சபாநாயகர் எமக்கிருப்பதற்காக. ஜனநாயத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தொடர்பாக அறிந்து கொள்ள எம் நாட்டு மக்களுக்கு எவருடைய வகுப்புக்களும் தேவையில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இன்று தோன்றிருக்கும் பிரச்சினை ஜனநாயகத்திற்கும் ஏகாதிபத்திய தீர்ப்பிற்கும் இடையிலான பிரச்சினையாகும். எங்களுடைய ஜனநாயக நாட்டினுள்ள தனி ஒரு மனிதன் தான் தோன்றித்தனமாக ஆட்சி செய்ய முடியாது. இது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி எமது உயிரை துறக்கவும் தயார்.

பலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள் நல்லாட்சியின் மூலம் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என நேற்று முன்தினம் நாம் கண்கூடாக கண்டோம் சுயாதீனமாக இயங்கும் மேல் முறையீட்டு நீதிமன்றை ஜனநாயக ஆட்சியுள்ள தேசத்திற்குள் மக்களின் விருப்பு வெறுப்பு வெளிப்படுவது 225 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றிலாகும்.

அத்தகைய பாராளுமன்றில் மக்கள் சக்தியை பாதுகாக்கும் பிரதான அதிகாரம் இருப்பது சபாநாயகருக்காகும். நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் பாராளுமன்றில் கட்சி சார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் வாக்கெடுப்பிற்கு பயமில்லாத சபாநாயகர் எமக்கிருப்பதற்காக.

ஜனநாயத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தொடர்பாக அறிந்து கொள்ள எம் நாட்டு மக்களுக்கு எவருடைய வகுப்புக்களும் தேவையில்லை. நேற்று, இன்று கடந்த சில தினங்களாக என்ன நடந்தது என்று நீங்கள் இணையத்தினூடாக கண்டிருப்பீர்கள்,  பாராளுமன்றில் வாக்கெடுப்பிற்கு பயந்து ஓடியவர்கள் யார் என்று சமூகவலைத்தளங்களினூடாக நீங்கள் கண்டிருப்பீர்கள்.

வாக்கெடுப்புக்களுக்கு பயந்தவர்கள் மக்களின் பலம் இல்லாதவர்கள், திருட்டு வழியில் பிரதமர் பதவியையும் அரசாங்கத்தையும் கைப்பற்றியவர்கள் இன்று பாராளுமன்றிற்குள் வாக்கெடுப்பிற்கு பயந்துள்ளார்கள்.

அதனால் தான் பாராளுமன்றிற்குள் வாக்கெடுப்புக்கு விடும் போது காட்டுவாசிகளையும் விட மோசமாக செயற்படுகிறார்கள். அடிக்க வருகிறார்கள், வெட்ட துடிக்கிறார்கள், சபாநாயகரின் ஒலிவாங்கியை உடைக்கிறார்கள், அரச சொத்தை வீணடிக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் அவர்களுக்கு சொல்வது என்னவென்றால் பாராளுமன்றில் அமைச்சு பதவி மற்றும் மக்கள் பலம் இல்லாதவர்களுக்கு விஷேடமாக சொல்லிக்கொள்வது என்னவென்றால் நாங்கள் தோட்டாக்களுக்கு பயமில்லை. நாங்கள் கட்டுத்துப்பாக்கிகளுக்கு பயமில்லை. வாள் , கத்திகளுக்கு பயமில்லை. தற்கொலை செய்துகொள்ளும் குண்டுதாரிகளுக்கும் பயமில்லை. நாங்கள் உறுதியாக ஜனநாயகத்தின் மூலம் வெற்றி பெறுவோம் எனக் கூறிக்கொள்கிறேன்.

நாங்கள் நேற்று முன்தினமும் வெற்றி பெற்றோம் நேற்றும் வெற்றி பெற்றோம் இன்றும் வெற்றி பெற்றோம். இந்த திருட்டு அரசாங்கத்திற்கு முதுகெலும்பிருந்தால், உயிருள்ள தலைவர்களாயிருந்தால் நாளை பாராளுமன்றை கூட்டும் போது உங்களுக்கு தைரியம் இருந்தால் தேர்தலுக்கு முகம் கொடுங்கள் என சவால் விடுக்கின்றோம்.

ஆனாலும் தோழர்களே இவர்களுக்கு தேர்தல் பழக்கமில்லை வாக்கெடுப்பு என்று கூறியதும் சரி என்றால் தைரியமாக விரலை பதித்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். ஆனால் இவர்களுக்கு விரல் அடையாளங்கள் இல்லை, அவர்களுக்கு இருப்பது சர்வாதிகாரத்தோடு எச்சரிப்பது மிரட்டுவது ஆகும்.

இவர்களது மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயந்து விடுவோம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஒன்று கூறிக்கொள் விரும்புகிறேன் இவர்களது மிரட்டல்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சி ஒரு போதும் பணியாது ஐக்கிய தேசிய கட்சி தலைவர் உட்பட அனைவரும் உயிர்த்தியாகம் செய்தாவது ஜனநாயகத்தை நிலைநாட்ட தயாராகவுள்ளோம்.

நாங்கள் இன்று செய்துகொண்டிருப்பதும் மற்றுமொரு மக்கள் சுதந்திரப் போராட்டமாகும். தேசப்பிதா டி.எஸ்.சேனாநாயக்க அன்று வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரத்தை பெற்று தந்தார். அந்த சுதந்திர போராட்டத்தினூடாக நாங்கள் பெற்றுக்கொண்ட ஜனநாயகம் இன்று சூழ்ச்சிகாரர்களால் சிக்கலில் உள்ளது.

இச் சிக்கலில் இருந்து நாட்டையும் தேசியத்தையும் பாதுகாப்பது எமது நோக்கமாகும்.

இன்று ஆட்சி மாறியுள்ளது ஆனால் இடங்கள் பகிர்ந்தளிக்கப்படுகிறதா? வீடுகள் கட்டப்படுகிறதா? கம்பெரலியவிற்கு என்ன நடந்தது? என்டபிரைஸ் ஸ்ரீலங்காவிற்கு என்ன நடந்தது? வேலை வாய்ப்பு வேலைத்திட்டங்களுக்கு என்ன நடந்தது?

இன்று விவசாயிகள் அநாதைகளாகியுள்ளனர். கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார்கள். இந்த மக்களை கட்டி காக்க வேண்டும்.

பெரும்பான்மையில்லாத சிறுபான்மையினருக்கு தில்லிருந்தால் நளை பாராளுமன்றில் மூன்றாவது முறையாகவும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறு கூறிக்கொள்கிறேன்.

நாங்கள் தேர்தலுக்கு பயந்தவர்கள் இல்லை தேர்தலுக்கு தயார் ஜனாதிபதிக்கு தில்லிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்று காட்ட சொல்லுங்கள் இந்த சவாலை பகிரங்கமாக தெரிவிக்கின்றேன்” என தெரிவித்தார்.