நம்பகரமான விசாரணை முக்கியமானதாகும்  : ஐக்கிய நாடுகள் சபை  

Published By: MD.Lucias

22 Mar, 2016 | 06:54 PM
image

இலங்கையில் யுத்த காலத்தில்  இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும்  சம்பவங்கள்  தொடர்பில் நம்பகரமான விசாரணை பொறிமுறை  முனனெடுக்கப்படவேண்டியது அவசியம் என்று   ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

இவ்வாறான நம்பகரமான  விசாரணை பொறிமுறைக்கான  வழிகாட்டல்களை   தெளிவான முறையில் ஐக்கிய நாடுகள் சபை  வெளியிட்டுள்ளதாக  ஐ.நா. செயலாளர் நாயகத்தின்  பேச்சாளர்  பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். 

எக்காரணம் கொண்டும்  விசாரணை பொறிமுறையில்  சர்வதேச நீதிபதிகள் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள் என்று  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன   தெரிவித்துள்ளமையை சுட்டிக்காட்டி  ஐ.நா. செயலாளர் நாயகத்தின்  பேச்சாளரிடம் நேற்று    எழுப்பப்பட்ட  கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறு விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என்பதனை  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை  மதிப்பீடு செய்யலாம்.  ஆனால்  விசாரணை செயற்பாடானது  நம்பகரமாக அமையவேண்டும் என்பதனை நாங்கள் உறுதிபடுத்தவேண்டும்.   அத்துடன்   நம்பகரமான  விசாரணை பொறிமுறைக்கான  வழிகாட்டல்களை   தெளிவான முறையில் ஐக்கிய நாடுகள் சபை  வெளியிட்டுள்ளது.     அவ்வாறு நடைபெறுவதை உறுதிபடுத்தும் நோக்கில்   கலந்துரையாடல்களை  தொடர்ந்து நடத்துவோம் என்றும்  ஐ.நா. செயலாளர் நாயகத்தின்  பேச்சாளர்  பர்ஹான் ஹக்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15