இன்றைய திகதியில் நான்கு வயதிலிருந்து ஐம்பது வயதிற்குட்பட்டவர்களில், நூற்றில் மூன்று பேருக்கு Obsessive=Compulsive Disorder என்ற பாதிப்பிற்கு ஆளாகுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இது தொடர்பான விழிப்புணர்வையும் உலக சுகாதார நிறுவனம் முன்னெடுத்திருக்கிறது.

இத்தகைய பாதிப்பு பொதுவாக அனைவரிடத்திலும் இருக்கும் என்றாலும், சிலருக்கு இது தீவிரமாகும் போது அவர்களால் ஒரே விதமான எண்ணங்கள் மீண்டும் மீண்டும் வருவதை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பார்கள். 

சிலருக்கு இதன் வெளிப்பாடு வேறு வகையினதாக இருக்கும். 

இதற்கு உடலில் சுரக்கும் சொரோடோனின் என்ற வேதியல் பொருளின் உற்பத்தியில் ஏற்படும் சமச்சீரின்மையே காரணம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. 

இதற்காக சிலருக்கு உளவியல் சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.  சிலருக்கு Cognitive Behavioral Therapy என்ற சிகிச்சையும் தேவைப்படலாம். இதற்கு மன அழுத்ததிற்கு ஆளாகாமல்  மனதை இயல்பாக வைத்திருக்கவேண்டும். 

தினமும் முப்பது நிமிடம் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யவேண்டும். 

ஆரோக்கியமான உணவை சரியான தருணத்தில் சாப்பிடவேண்டும். இவையெல்லாம் மேற்கொண்டால் இத்தகைய பாதிப்பினை ஓரளவிற்கு கட்டுக்குள் வைத்திருக்க இயலும்.

டொக்டர் ராஜ்மோகன்