ரிசாத்தையும், ஹக்கீமையும் வசப்படுத்த முடியுமென ஒருபோதும் நினைக்காதீர்கள். முடியுமென்றால் ஜனாதிபதி தேர்தலை நடத்திகாட்டுங்கள்.மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபித்து காட்டுகின்றோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சவால் விடுத்துள்ளார்.

வெற்றியை உறுதிப்படுத்வோம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணி தற்போது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் மக்கள் பேரணி ஒன்றை நடத்திவருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.