ஹெரோயின் போதைப்பொருட்களைக் கொண்டுசென்ற இருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.கடுவல பிரதேசத்தில் வைத்து குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ஒரு கிலோ நிறையுடைய 12.6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.