வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்திற்குள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் சென்ற 4 பேர் 1 கிலோ 580 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியாவில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை இடம்பெற்ற விஷேட நடவடிக்கையின்போது தமது உடமைகளில் மறைத்து வைத்து யாழப்பாணத்திலிருந்து திருகோணமலை, யாழ்ப்பாணம் வவுனியா, யாழ்ப்பாணம் கதிர்காமம் சென்ற பஸ்கனில் சென்றவர்களினால் எடுத்துச் செல்லப்பட்ட சட்டவிரோத கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன
திருகோணமலை, நெளுக்குளம், பாவற்குளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 38,19,29,26 வயடைய நால்வரை கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்து 1கிலோ 580கிராம் கேரளா கஞ்வினை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் அவர்களை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM