(இரோஷா வேலு) 

பிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன் பொரளை டி 20 தோட்டத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை 4.20 மணியளவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் அவரிடமிருந்து 5 கிராம் 650 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியதுடன் அவரை மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.