(ஆர்.விதுஷா)

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அயல் வீட்டிற்கு மின் இணைப்பை ஏற்படுத்த முற்பட்ட சந்தர்ப்பதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மின்சார தாக்குதலுக்கு உள்ளான குறித்த இளைஞர் சிகிச்சைகளுக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிக்கை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

சபம்வத்தில் உயிரிழந்தவர்  27 வயதுடைய இஹத பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.