அமெரிக்க குடியரசின்  பொலிவியாவில்  சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடி மக்களின் சமாதியொன்று அண்மையில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பல தொல்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிவிய அகழ்வாராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.. 15 ஆம் நூற்றாண்டில் குறித்த பகுதியில் அதிகளவில் பழங்குனயினர் வாழ்ந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பொலிவியாவின் கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் கடந்த மூன்று மாதங்களாக மேற்கொண்ட அகழ்வாராச்சிகளின் அடிப்படையில் பெருமளவு தொல்பொருகள் அங்கிருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் பெகாஜஸ் எனப்படும் பழங்குடி வர்க்கத்தினர் குறித்த பகுதிகளில் கூட்டமாக வாழ்ந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

பொலிவிய தலைநகர் லா பாஸ்ஸில் இருந்து 30 கிலோமீற்றர் தெற்மேற்காக அமைந்துள்ள தரைக்கீழ் கல்லறையொன்றில் பழங்குடியினரின் கல்லறையாக கருதப்படும் இடத்தில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதில் ஒரு கல்லறை போன்ற அமைப்பில் இருந்து நினைவுச்சின்ன தொல்பொருள் பண்புகளுடன் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, கற்பாறையில் குகைபோன்ற அமைப்பொன்றில் இருந்து 108  மனித எச்சங்கள் ஆராய்ச்சியாளர்களால் மீட்கப்பட்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தொல்பொருட்கள் இன்கா கலாச்சாரத்தை தெளிவாக புலப்படுத்தும் வகையில் உள்ளன. அவற்றில் இன்கா இல்லாத மற்ற கலாசாரங்களைச் சேர்ந்த பழங்குடியினரின் பொருட்களும் உள்ளன.

ஆனால் பொலிவியாவில் வாழ்ந்ததாக கருதப்படும் அய்மாரா வர்க்கத்தினரின் உடமைகள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இரண்டு பாரிய கல்லறைகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், இன்னொரு கல்லறைப்பகுதி தோண்டப்படாத நிலையில் உள்ளது.