“ஜனாதிபதி நாட்டின் பாராளுமன்ற முடிவை மதிக்க மறுத்து விட்டார் மீண்டும், நமது நாட்டின் ஜனநாயகம் ஒரு புறம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது” என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற முடிவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும். மீண்டும் நாட்டில் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக இன்று ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு நாட்டின் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டமானது இன்று பகல் 2 மணியளவில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.